புலனாய்வு

இலஞ்சத்திற்கு எதிரான மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுவானது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் சுயமாகவே தனது தற்றுணிபின் அடிப்படையில் விசாரணை நடாத்தும் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனமாகும்.

ஆணைக்குழுவானது முறைப்பாடுகள் தொடர்பில் வினைத்திறன்மிக்கதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுப்பதனை தலையாய பணியாக கொண்டு செயற்படுகின்றதுடன் பெரும் உற்சாகத்துடன் விசாரணைகளை முன்னெடுக்கின்றது. அதிகரித்து வரும் இலஞ்சம் மற்றும் ஊழலினை குறைக்கும் வகையில் ஆணைக்குழுவானது விருத்தியடைந்த நவீன நுட்பங்களையும் முறைமைகளையும் புலனாய்வில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலிற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுக்கவும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பலமான நெருங்கிய பிரத்தியேக தொடர்புகளை ஸ்திரமாக்கியுள்ளது. தற்போது இலஞ்ச சட்டமானது அரச அலுவலர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ள நிலையில் அதனை தனியார் துறை சார்ந்தவர்களுக்கும் பொதுவானதாகவும் ஏற்புடையதாகவும் மாற்றி புலனாய்வு வழக்கிடுதலை மேற்கொள்ளும் வகை செய்வதற்கான பரிந்துரைகளையுள்ளடக்கிய (சட்;ட திருத்தங்களை) வரைவினை அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகள் தற்போதைய குற்றவியல் நீதி வழிமுறை மூலம் நடத்தப்படுகின்றன. இலஞ்சம் மற்றும் ஊழலின் சமகால குற்றங்களின் சிக்கல்கள் நிலைமை குறித்து ஆணைக்குழுவானது உணர்ந்துள்ளதுடன் குரழெழுப்புவோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் பயனுள்ள வழிமுறைகளை உள்ளடக்கிய நவீன வழிமுறைகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய முக்கிய வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் கண்காணிப்பதற்குமான செயற்பாடுகளை திறம்பட முன்னெடுப்பதிலும் மேம்படுத்துவதலும் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பினை மீளாய்விற்குற்படுத்தி வினைத்திறன்மிக்கதும் பயனுள்ளதுமான சட்ட அமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search