இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் அவர்கள் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயத்தின் 10 ஆவது அமர்வின் இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் தொடர்பிலான திறந்த சிறப்பு கூட்டத்தொடரில் வளவாளராகவும்> நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டதுடன் தேசிய செயற்பாட்டுத்திட்டம் தொடர்பிலான விரிவுரையை நிகழ்த்தினார்.




இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) ஆணையாளர் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளிவ். லால். ரஞ்சித் சில்வா> பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்ட்தரணி சரத் ஜயமான்ன மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சனி செனவிரத்ன ஆகியோர் மேற்படி கூட்டத்தொடரில் பங்குபற்றியதுடன் பூட்டான் மற்றும் சில நாடுகளுடன் இருபக்க கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
2019 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் CIABOC இற்கு விஜயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி சலுகைகளின் கீழ் கடமைகளை செயல்படுத்துவதையும், தேசிய செயல் திட்டம் மற்றும் சட்டம் மற்றும் ஆன்லைன் மூலமான சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் முறையின் திருத்தங்களையும், அதனை செயற்படுத்துவதற்கான CIABOC இன் ஆர்வ வெளிப்பாட்டினையும் அவதானித்தனர்.


