இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழித்து நேர்மைத்திறனான நாடொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சியொன்று கடந்த 20.10.2024 அன்று பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெற்றது. பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 நாள் பயிற்சி முகாமொன்றில் இரண்டாவது நாளில் 'நேர்மைத்திறனான அரச சேவை' எனும் தொனிப்பொருளில் விரிவுரையாற்றுவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேர்மைத்திறன் கோட்பாடு, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மற்றும் இலஞ்சம், ஊழலின் விளைவுகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.