குருநாகல், பௌத்தலோக மாவத்தை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட தனியார் காணிக்குரிய உறுதிக்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ. 50000/= ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாண சபையின் மாகாண உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பணிபுரியும் மதிப்பீட்டு அதிகாரியான பெண்மணி ஒருவர், கடந்த 17.03.2025 அன்று பிற்பகல் 1.05 மணியளவில் மாகாண இறை வரி திணைக்கள அலுவலகத்தில் அவரின் அலுவலக மேசைக்கு அருகில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்;.