இலங்கை மின்சார சபையின் அழைப்பின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 20-03-2025 அன்று இலங்கை மின்சார சபை, பிலியந்தலை பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்சித்திட்டத்தில் நேர்மைத்திறன்இ அரச ஊழியர்களின் பொறுப்படமை மற்றும் செயற்றினை மேம்படுத்தல், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள்இ இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர்களான திரு சம்பத் மற்றும் திருமதி மதுகா ருவந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர்.