இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் ஏப்ரல் 29, 2025 அன்று இலங்கை மின்சார சபையின் அவிஸ்ஸாவெல பிராந்திய அலுவலக விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது, மேலும் மின்சார சபையின் அவிஸ்ஸாவெல கிளையைச் சேர்ந்த மின் பொறியியளாளர்கள் உட்பட சுமார் 80 அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழவின் சார்பில் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி திருமதி என்.டி.என்.சி. ஜயசிங்க மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் மூலம், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது மற்றும் அதன் விளைவுகள், இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் நேர்மைத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.














