நேர்மையான தேசமொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான இன்னுமொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு மாநகர சபை அதிகாரிகளை மையப்படுத்தி 2024.02.15 அன்று நடைபெற்றது.
இலங்கையின் தொன்மையான உள்ளூராட்சி நிறுவனமொன்றான கொழும்பு மாநகர சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்வு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட வரையறைகள், நேர்மைத்திறன் தொடர்பான எண்ணக்கருக்கள் மற்றும் செயற்பாடுகளை உள்ளடக்கியிருந்தது. இந்நிகழ்வின் வளவாளர்களாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அனுஷா சம்மந்தப்பெரும மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி நிபுனி தென்னகோன் ஆகியோர் பங்குபற்றினர்.