ஊழல் எதிர்ப்பு தொடர்பான வெற்றிகரமான ஸ்டிக்கர் பிரச்சாரத்தின் காரணமாக முறைப்பாடுகளில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் முயற்சியில், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்வதற்கான ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதனடிப்படையில் காலியில் தொடங்கி கண்டி, அனுராதபுரத்தை தொடர்ந்து இப்பிரச்சாரம் டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் அதிகமாகக்கூடும் புகையிரத நிலையங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிறைவடைந்த ஸ்டிக்கர் விநியோகப் பிரச்சாரம் அமோக வரவேற்பைப் பெற்றது. உள்ளுர் பொது மக்களின் ஆதரவுடன் பேருந்துகளின் உள்ளேயும், முச்சக்கர வண்டிகளின் பின்னாலும், பரபரப்பான காய்கறி,மீன் சந்தைகளிலும் ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றன.
அதிகாலையில் தொடங்கிய இப்பிரச்சாரம் யாழ் புகையிரத நிலையம், பஸ் தரிப்பிடம், திருநெல்வேலி காய்கறி சந்தை, குருநகர் மீன் சந்தை மற்றும் நல்லூர் கோவிலை சுற்றியுள்ள பிரதேசங்களில் இடம் பெற்றதுடன் மாலையில் பருத்தித்துறை பிரதேசத்திலும் ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்காக பொதுமக்கள் அதிகமாக புலங்கும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டன.
கடந்த 3 மாதங்களில் ஆணைக்குழுவானது முறைப்பாடுகளில் கணிசமான அதிகரிப்பை பதிவு செய்தமையானது இப்பிரச்சாரத்தின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அக்டோபர் மாதத்தில் 383 முறைப்பாடுகளும், அதைத்தொடர்ந்து நவம்பரில் 238 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. டிசம்பரில் இவ்வெண்ணிக்கை 427 ஆக அதிகரித்தது. இவற்றைச் சேர்த்து 2023 வருடத்திற்கான மொத்த முறைப்பாடுகள் 3431 ஆகும். இது 2022 வருடம் கிடைத்த 2512 முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது 26மூ அதிகரிப்பாகும்.
ஊழல் தடுப்பு அதிகாரிகளான சிலாமேக வெலிதொட்டகே மற்றும் சம்பத் ஆரச்சிகே ஆகியோர் ஊழல் தடுப்பு நிவாரண பிரிவின் ஒத்துழைப்புடன் காலி,கண்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினர். இந்த கூட்டு முயற்சியைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் கணிசமான அதிகரிப்பானது, மக்களின் ஊழலுக்கு எதிரான உணர்வு வளர்ச்சியடைவதைக் குறிக்கின்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத் தொடர் ருNனுP மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து துருசுநு (நீதித் துறைக்கான ஆதரவு) திட்டத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டதாகும்.