இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (ருNனுP) இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் நடத்திய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி (வுழுவு) மாபெரும் வெற்றிப்பதிவாகியுள்ளது.
பொதுச் சேவையில் நேர்மைத்திறனை நிலைநிறுத்துவதை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டு தேசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இலட்சியப் பயணத்தில், இது ஊஐயுடீழுஊ இன் அரசு ஊழியர்களை ஊழல் எதிர்ப்பு பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிக்கும் ஏழாவது செயன்முறையாகும். இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளுர் மக்களில் கணிசமான பகுதியை சென்றடைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செழுமையான இனப் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற சப்ரகமுவ மாகாணத்தில், அதன் மக்கள் அன்றாட வாழ்வில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மூன்று நாள் வதிவிட பயிற்சித்திட்டத்தின் போது, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் புதிய ஏற்பாடுகள் அறிமுகப் படுத்தப்பட்டதுடன், ஊழலை தடுப்பதற்கான நீண்டகால உத்திகள் ஆழமாக ஆராயப்பட்டன.