இலஞ்சக்குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னால் தலைவரால் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் 2023.11.10 அன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 10 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கேட்டு, பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையை சவாலுக்குட்படுத்தி அதன் முதல் சந்தேக நபரான மத்திய சுற்றாடல் அதிகாரி சபையின் முன்னால் தலைவரொருவரால் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் விண்ணப்பத்தினை விசாரிப்பதற்கு அனுமதி வழங்காமல் 2024.02.20 அன்று முதல் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது.
விண்ணப்பதாரரால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னால் ஆணையாளர்கள், தற்போதைய ஆணையாளர்கள,; சட்டமா அதிபர், பொலீஸ் மாஅதிபர், ஆணைக்குழுவின் செயலாளர், இரு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கறுவாத்தோட்ட பொலீஸ் நிலைய நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை பிரதிவாதிகளாக்கி 295/23 எனும் இலக்கத்தின் கீழ் இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
பிரதிவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அரச வழக்கறிஞர் ஷமிந்த விக்ரம அவர்களுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் நாயகம் திஸ்னா குருசிங்ஹ மற்றும் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) அமா விஜேசிங்ஹ ஆகியோர் பங்கேற்றனர்.