இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நேர்மைத்திறன் தொடர்பான அறிவுறுத்தல் நிகழ்ச்சியொன்றை நடத்தியது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஊழலுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணிகளாக நேர்மைத்திறன் தொடர்பான கல்வியை மேம்படுத்தல் மற்றும் அது இளைய தலைமுறையினரை சென்றடைதல் ஆகிய விடயங்களை இனங்கண்டுள்ளது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரணப் பிரிவு அக்டோபர் 3, 2024 அன்று இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான ஒரு நிகழ்ச்சியினை நடத்தியது.

இலங்கையில் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி குறித்த கல்வியை வழங்கும் ஒரே நிறுவனமான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் இந்த நிகழ்வை நடத்தியது. எந்தவொரு துறையிலும் தரமான முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாக நேர்மைத்திறனின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது. இந்நிகழ்வில் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியொர் பங்கேற்றனர்.

இந்த முழு நாள் நிகழ்ச்சித் திட்டமானது நேர்மைத்திறனுடன் தொடர்புடைய கல்வி சார் மற்றும் கல்வி சாரா பிரச்சினைகள் தொடர்பான மதிப்புமிக்க தடுப்பு நிவாரண கருத்துகளை வழங்கியது. இந்நிகழ்வில் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவப் படுத்தி மீன்வளர்ப்பு மற்றும் கடல் உணவு தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபத கலாநிதி டபிள்யூ.ஏ.ஏ.டி. லங்கா விக்கிரமசிங்க மற்றும் கரையோர மற்றும் கடல் வள முகாமைத்துவ பிரிவின் விரிவுரையாளர செல்வி. சாமலி ரத்னஸ்ரீ ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரணப் பிரிவு உத்தியொகத்தர்களான சம்பத் ஆரச்சிகே மற்றும் சிலாமேக வெலிதொடகே ஆகியோரால் நடத்தப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இந்த முன்முயற்சியானது இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக, குறிப்பாக கடல்சார் ஆய்வுகள் மற்றும் கடல் ஆராய்ச்சி போன்ற சிறப்புத் துறைகளில் செயற்படும் இளம் தொழில் வல்லுநர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

53 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search