தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளால் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழித்தல் தொடர்பில் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் தொடர் அங்குராற்பணம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் 2024 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் இரத்மலானை தலைமை அலுவலக.
கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு இந்த ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் தொடர் மூலம் 2023 ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்பு சட்டம், ஊழலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், நேர்மைத்திறன் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திரு.சம்பத் ஆராச்சிகே, திருமதி ஜே.எல்.ஏ உதேசிகா மதுபாஷனி, திருமதி இஷானி விஜேசூரிய ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.