இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் பிரதான நோக்கத்தின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு 2024-12-18 அன்று இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைகேடுகளை இல்லாதொழித்து நேர்மையான அரச சேவைக்காக அரச அதிகாரிகளை வலுவூட்டும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை மற்றும் சீர்திருத்தப் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது, மேற்படி நிகழ்வில் 75 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சுமார் 6 மணித்தியாலயங்கள் நடந்தேறிய பயிலரங்கில் பங்குபற்றி பயனடைந்தனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திருமதி விமுக்தி ஜயசூரிய மற்றும் திரு.சம்பத் ஆராச்சிகே ஆகியோர் செயலமர்வின் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.