இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புதிய சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொது பயணிகள் போக்குவரத்து துறையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும்; நோக்கத்துடன் நேர்மைத்திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான பிரிதொரு தடுப்பு நிவாரண நிகழ்ச்சி கடந்த 07.02.2025 அன்று நடைபெற்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் 38 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு பஸ்தியன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திருமதி நிபுனி கோஷிலா தென்னகோன் மற்றும் திருமதி என்.விமுக்தி ஜயசூரிய ஆகியோர் வளவாளர்காளக கலந்து சிறப்பித்தனர்.