இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழித்து வளமான நாட்டை உருவாக்கும் நோக்குடன் மலர்ந்த 2025 ஆம் ஆண்;டில் தனியார் துறைக்கான முதலாவது தடுப்பு வேலைத்திட்டம் 16.01.2025 அன்று போகல கிராஃபைட் லங்கா தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுக்காக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் உட்பட 37 நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளான திருமதி நிபுனி கோஷிலா தென்னகோன் மற்றும் திருமதி உதேஷிகா மதுபாஷனி ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர்.