களனி பள்ளத்தாக்கு தோட்ட தனியார் நிறுவன முகாமைத்துவம் மற்றும் தோட்ட ஊழியர்களுக்கு 2025 பெப்ரவரி 11 ஆம் திகதியன்று நிகழ்நிலை மூலம் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய பயிற்சி நெறியானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்நிலையில் மைக்ரோசொப்ட் TEAM செயலி மூலம் நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுனர்கள் களனி பள்ளத்தாக்கு தோட்ட மாநாட்டு மண்டபத்தில் இருந்து இணைந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களிடையே நெறிமுறை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி உதேசிகா ஜயசேகர மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்; திருமதி மதுகா ருவந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், நெறிமுறை பொறுப்புகள் மற்றும் வேலைத்தளத்தில் இலஞ்சத்தைத் தடுப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்த விடயங்கள் இவ்வமர்வில் கலந்துரையாடப்பட்டது.
ஹட்டன், நுவரெலியா மற்றும் யட்டியந்தோட்டை பகுதிகளில் உள்ள 25 தோட்டங்களைச் சேர்ந்ததோட்ட ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இந்த நிகழ்நிலை அமர்வில் பங்கேற்று, சமகால சூழ்நிலைகள் மற்றும் ஊழலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இந்த முயற்சி நிறுவனத்திற்குள் நேர்மைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்தது.