தெஹியத்தகண்டியவில் உள்ள மகாவலி அபிவருத்தி அதிகார சபையின் (MDA) C வலயத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுடன் (CIABOC) இணைந்து, ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில் காணி உத்தியோகத்தர்கள்;, பிரிவு முகாமையாளர்கள், கள உதவியாளர்கள், எழுதுனர்கள், அலுவலக நிர்வாகிகள், பொறியியளாளர்கள் மற்றும் விவசாய ஆலோசகர்கள் ஆகியோர் அரச வள முகாமையில் நேர்மைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒன்றிணைக்கப்பட்டனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திரு சம்மி சிறி லால் தொட்டவத்த மற்றும் திரு. சிலாமேக வெலித்தொட்டகே ஆகியோர் வளவாளர்காளக கலந்து சிறப்பித்தனர்.
இந்த திட்டத்தின் மூலம், இலஞ்சம் மற்றும் அதன் விளைவுகள், இலஞம் ஊழல் தொடர்பான தெளிவுகள்> நெறிமுறை நடைமுறைகள் மற்றும் பொறுப்புக் கூறலில் கவனம் செலுத்துதல் மற்றும் குறித்தும் நாட்டின் விவசாய மறுமலர்ச்சி மற்றும் நிலையான அபிவருத்தி இலக்குகளை ஆதரிக்கும் வகையில் தெளிவுபடுததல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.