ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த தொடர் நிகழ்ச்சிகள்> ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் இணைப்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன் அத்தொடரில் இறுதி நிகழ்ச்சி 2025.03.11 அன்று ஆட்பதிவுத் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் இதில் சுமார் 90 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC). ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திருமதி உதேஷிகா ஜயசேகர மற்றும் திருமதி விமுக்தி ஜயசூரியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஊழல் தடுப்பு உத்திகள்> இலஞ்ச ஊழலின் விளைவுகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடரபான சந்தேக நிவர்த்திகள், நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட அறிமுகம் முதலான விடயப்பரப்புக்களில் தெளிவூட்டல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.; இந்த இறுதி நிகழ்ச்சி தொடரில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி ஆணையாளரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.