தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வளவ்வ பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.03.10 முதல் 2025.03.16 காலப்பகுதியில் நடைபெற்றதுடன் அதன் 06 வது நாள் 2025.03.15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
எம்பிலிபிட்டிய டி. ஏ. ராஜபக்ஷ நினைவு மண்டபத்தில் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜயசேகர இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளரhக கலந்து விரிவுரையை முன்னெடுத்தhர். . இந்த நிகழ்ச்சியின் மூலம், இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் அதன் விளைவுகள், இலஞ்ச ஊழல் தொடர்பிலான கேள்வி பதில்கள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது.