ஸ்ரீ லங்கா டெலிகோம் மொபிடல் தனியார் கம்பனி அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய தொடர்ச்சியான தடுப்பு நிவாரண திட்டங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் 2025.03.07 ஆம் திகதி அன்று SLT Mobitel PLC நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் அதில் 140 அலுவலர்கள் பங்குபற்றினர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர்களான செல்வி நிபுனி தென்னக்கோன் மற்றும் திரு. சம்மி ஸ்ரீலால் ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். அதில் நேர்மைத்திறன், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.