இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் எல் வலயத்தி;ல்> அதாவது வெலிஓயா வலயத்தி;ல் பணியாற்றும் சுமார் 120 அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித் திட்டம் 21.03.2025 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. வெலிஓயா பிராந்தியத்தில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் மேற்படி தடுப்பு நிவாரண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி உதேசிகா ஜயசேகர மற்றும் திரு. சம்மி ஸ்ரீலால் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் நேர்மைத்திறன், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அழைப்பின் பேரில், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் போன்ற அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கு பற்றி பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.