இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாணவத்தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் இன்னும் இரண்டு நிகழ்வுகள் புத்தளம் ஆணமடுவ மாதிரி பாடசாலை, ஆணமடுவ மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேர் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரி, சீவலி மகா வித்தியாலயம், விலயாய மத்திய மகா வித்தியாலயம், ஆனந்த மகளிர் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேரிற்கும் நடாத்தப்பட்டது.
நேர்மைத்திறனை விருத்தி செய்தல் மற்றும் அதன் நடைமுறைப்பாவனை, தலைமைத்துவ பண்புகள், நேர்மைக்குழு உருவாக்குதல் தொடர்பாக விவாதித்தல் மற்றும் திறன்களை வெளிப்படுத்தல் என்பவற்றின் மூலம் மாணவர்களின் நேர்மைத்திறன் மற்றும் தலைமைத்துவத்தை விருத்தி செய்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
ஆணமடுவ மாதிரிப் பாடசாலை, ஆணமடுவ மத்திய மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்வு 2023 டிசம்பர் மாதம் 21ம் திகதி மாதம்பை மஹகெதர கோல்டன் ஹெவன் ஹோட்டலிலும் ரோயல் மத்திய மகா வித்தியாலயம்,சீவலி மகா வித்தியாலயம், விலயாய மத்திய மகா வித்தியாலயம், ஆனந்த மகளிர் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்வு 2023 டிசம்பர் 22ம் திகதி பொலன்னறுவை ஹனி ட்ரீ ஹோட்டலிலும் நடைபெற்றது.
ருNனுP இன் துருசுநு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இந்நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னால் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுனேத்ரா ஜயசிங்ஹ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளான உதேஷிகா ஜயசேகர, விமுக்தி ஜயசூரிய, ருஷாந்தி தில்ஷானி, ஷம்மி சிறீலால் மற்றும் மதுகா ருவந்தி ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியதுடன் தொழிநுட்ப உதவிகள் புலனாய்வு அதிகாரி பிரதீப் அமரஜீவ அவர்களால் வழங்கப்பட்டது.