பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024.03.01 அன்று விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை)(தனியார்) நிறுவனத்தின் அமைச்சரவை பங்களாவில் இடம்பெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித் கனிஷ்க விஜேரத்ன அவர்கள், பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி. மயூரி உடவெல அவர்கள், உதவிப்பணிப்பாளர் நாயகம் திருமதி. அனுத்தரா ஜயசிங்ஹ, உதவிப்பணிப்பாளர் நாயகம் திருமதி. துஷாரி தயாரத்ன, உதவிப்பணிப்பாளர் நாயகம் செல்வி. தனுஜா பண்டார, உதவிப்பொலீஸ் அத்தியட்சகர் திரு. ராஜ்குமார், உதவிப்பொலீஸ் அத்தியட்சகர் திரு. சுமேந்திர உள்ளடங்களாக ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான ஷம்மி சிறீலால் மற்றும் உதேஷிகா ஜயசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை)(தனியார்) நிறுவனத்தின் தவிசாளரின் தலைமையின் கீழ் அந்நிறுவன செயற்பாடுகளுடன் தொடர்புடைய 5 பிரதான பிரிவுகளான விமான நிலைய பாதுகாப்பு, விமான நிலைய முகாமைத்துவம், சட்டம், மூலோபாய முகாமைத்துவம் மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆதரவை எவ்வாறு பெற முடியும் என்பது தொடர்பாக இங்கு பிரதானமாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் நிறுவனத்தின் சகல அதிகாரிகளையும் விழிப்பூட்ட வேண்டியதுடன் நேர்மைத்திறன் அதிகாரிகள் மற்றும் நேர்மைத்திறன் குழுவொன்றினை அமைப்பதற்கான தீர்மாணம் எடுக்கப்பட்டது.