இலங்கை மின்சார சபையின் 100 அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சியொன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் 2024 மார்ச் 20ம் திகதி, கடவத்தையில் அமைந்துள்ள மேலதிக பொது முகாமையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் துஷ்மந்தி ராஜபக்ஷ, ஊழல் தடுப்பு அதிகாரி உதேஷிகா மதுபாஷினி மற்றும் சட்ட உதவியாளர் கயாஷானி உஸ்வத்த ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர். இதில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுத்தல் மற்றும் அவை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், நேர்மைத்திறன் தொடர்பாக அறிவுறுத்தல் என்பனவற்றுடன் புதிய ஊழல் தடுப்புச்சட்டம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.