அரச சேவையிலுள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான நேர்மைத்திறன் அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் 8வது நிகழ்ச்சி ஊவா மாகாணத்தை மையப்படுத்தி 2024.06.11 அன்று நடைபெற்றது. JURE திட்டத்தின் அனுசரணையுடன், ஐரேப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பதுள்ளை மற்றும் மொனராகலை மாவட்ட பிரதேச செயலங்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தி நேர்மைத்திறன் அதிகாரிகள் மற்றும் வசதிப்படுத்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
பொது மக்களின் சேவகர்களாகவும் இலங்கையின் பொருளாதாரத்தை கொண்டு செல்லும் மக்களுக்கு செயற்றிறனான மற்றும் துரித சேவையினை வழங்குவதையும் பொறுப்பாகக் கொண்ட இவ்வுத்தியோகத்தர்களின் நடைமுறைக் கடமைகள் இந்நிகழ்வில் வெளிக்காட்டப்பட்டன.
இங்கு, மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில, சிரேஸ்ட விரிவுரையாளர் தரிந்து வீரசிங்க, ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி சம்பத் ஆரச்சிகே ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்று அரச சேவையில் நேர்மைத்திறன் மற்றும் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல் தொடர்பாக விரிவுரைகளை வழங்கினர்.
JURE திட்டத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் ஊவா மாகாண நிர்வாக உத்தியோகத்தர்கள் தம்மில் நல்லாட்சி, நேர்மைத்திறன் மற்றும் தேசத்தின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.