இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டுஇ அனுராதபுர மாவட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிராம அலுவலர்களுக்கான அறிவூறுத்தல் நிகழ்ச்சியொன்று 2024 ஜூன் 24ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் நேர்மைத்திறன்இ புதிய ஊழல் எதிர்ப்பச் சட்டம்இ ஊழல் தொகைமதிப்புச் சுட்டி மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலின் பின்விளைவூகள் போன்ற தலைப்புக்களில் விரிவூரைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு அனுராதபுரம் மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி. டப்.எஸ்.பீ. விக்ரமஆரச்சி மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் திரு. பிரசன்ன யசரத்ன அவர்கள் பங்கேற்றதுடன்இ இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான சிலாமேக வெலிதொட்டகே மற்றும் டி.எம்.நிபுனி கோசிலா தென்னகோன் ஆகியோர் பங்கேற்றனர்.