கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 2024 ஜூலை 15 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 117 பொலிஸ் காண்ஸ்டபல் அலுவலர்களுக்காக ஊழல் சட்ட அறிமுகம் மற்றும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் விரிவுரைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி சால்தீன் எம். சப்ரி (உதவிப்பணிப்பாளர் சட்டம்) மற்றும் விசாரணை உத்தியோகத்தர் திரு. முகமது இர்பான் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர். கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி திரு.சிவானந்தன் அவர்களும் வரவேற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்தியதடன் பயிலுனர்கள் சார்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வானது நடைமுறைச் செயற்பாடுகளுடன் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் அதேவேளையில் தமது கடமைகளை ஆற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.