பல்கலைக்கழக சமூகத்தினை இலஞ்சம்இ ஊழல் மற்றும் நேர்மைத்திறன் தொடர்பாக அறிவூறுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடையே விசேட கலந்துரையாடலொன்று 2024.07.15 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் சிறிய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற இலங்கையை கட்டயெழுப்புவதற்காக பல்வேறு தடுப்பு நிவாரண திட்டங்களை பயன்படுத்த வேண்டி இருப்பதால்இ அதனை பல்கலைக்கழக சமூகத்தின் ஊடாக எதிர்கால் சந்ததியினருக்கு கடத்துவதற்கான பல்வேறு முன்மொழிவூகள் கலந்துரையாடப் பட்டதுடன் முக்கியமாக இரு ஆணைக்குழுக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவூம் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட விரிவூரையாளர் சம்பத் அமரதுங்க மற்றும் பிரதிச் செயலாளர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன்இ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ ஆணையாளர் பர்னாட் ராஜபக்சஇ மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.வை.ஆர்.கே. உடவெலஇ பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கங்கா ஹெய்யந்துடுவ ஆகியோருடன் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரிகளான சம்பத் ஆரச்சிகேஇ இசானி விஜேசூரியஇ ருசாந்தி தில்சானி மற்றும் நிபுனி தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.