மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனைத்து 50 அதிகாரிகளுக்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேராதனை, கெட்டம்பேயில் உள்ள கால்நடை வளர்ப்பு பயிற்சி மையத்தில் 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று, ஊழல் தடுப்பு நிவாரண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திருமதி ஜே.எல்.ஏ உதேசிகா மதுபாஸனி மற்றும் திரு. ஸம்மி ஸ்ரீலால் ஆகியோர் ஆகியோர் செயலமர்வின் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலஞ்சம், ஊழல் என்றால் என்ன, அதைத் தடுக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் யாவை, அதன் விளைவுகள், மேலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள், ஊழல் எதிர்ப்பு சட்ட அறிமகம் முதலான விடயங்களை உள்ளடக்கியதான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.