இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் பிரதான நோக்கத்தின் கீழ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைகேடுகளை இல்லாதொழித்து நேர்மையான அரச சேவைக்காக அரச அதிகாரிகளை வலுவூட்டும் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கல்லூரியின் சுமார் 100 பயிலுனர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்களான திரு. ஸம்மி ஸ்ரீலால், திருமதி எரங்கா மதூஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.