கொழும்பு மாநகர சபை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு CIABOC ஆகியவை இணைந்து தூய்மையான இலங்கை வாரத்தினை முன்னிட்டு சகல நிறைவேற்று அலுவலர்களின் பங்கேற்புடன் நடந்தேறிய நேர்மைத்திறன் பயிற்சிப் பட்டறை

கொழும்பு மாநகர சபை (CMC) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இணைந்து, 2025 பெப்ரவரி 08 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு மாநகர சபையின் நிறைவேற்றுத்தர அலுவலர்களுக்காக நேர்மைத்திறனை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி;திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. தூய்மை, நெறிமுறை நிர்வாகம் மற்றும் பொது பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக கௌரவ ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமான தூய்மையான இலங்கை விஷேட வாரத்தின் (Clean Sri Lanka Initiative Week) ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

வார இறுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமாக இருந்த போதிலும், இந்தப் பட்டறைக்கு அனைவரும் வருகை தந்திருத்தமை குறிப்பிடத்தக்கது. இது இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதில் நிர்வாகிகளின் வலுவான அர்ப்பணிப்பைக் வெளிப்படுத்துகிறது. CIABOC இன் ஊழல் தடுப்பு நிவாரண அதிகாரி சிலாமேகா வெலித்தொட்டகே வளவாளராக கலந்து சிறப்பித்ததுடன் நகராட்சி நடவடிக்கைகளுக்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைத்திறனை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பில் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

நெறிமுறை சவால்களைச் சமாளிப்பதற்கும் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் நடைமுறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் கொழும்பு மாநகர சபையின் (CMC) சட்ட மற்றும் மனிதவளத் துறைகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்த முயற்சியானது இலங்கையின் அரசதுறை நிறுவனங்கள் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை உள்ளீர்க்கவும் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

10 1

10 1

10 1

10 1

10 1

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search