இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட, இலங்கை திட்டமிடல் சேவை (2013 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட) தரம் II உத்தியோகத்தர்களுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சி, 'நிறுவன கட்டமைப்பிற்குள் பொதுத்துறை செயல்திறனை ஊக்குவித்தல்' என்ற தொனிப்பொருளில் 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி உதேசிகா ஜயசேகர மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்; திருமதி சாமோதி ஜயசிங்க ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்த திட்டத்தின் மூலம், இலஞ்சம் மற்றும் அதன் விளைவுகள், இலஞம் ஊழல் தொடர்பான தெளிவுகள், நேர்மைத்திறன் எண்ணக்கரு பற்றிய விளக்கம் அதன் உள்ளூர் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்தும் தெளிவுபடுததல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.