தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மொரகஹகந்த பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.02.24 முதல் 2025.03.02 வரையில் இலங்கை மகாவலி அதிகாரசபையின் மொரகஹகந்த பிராந்தியத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 120 அதிகாரிகளின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் நிறைவு நாள் 2025.03.02 “திருப்திகரமான சேவைக்காக ஊழியர் உற்பத்தித்திறன் தினம்” என்று பெயரிடப்பட்டதுடன் குறித்த தினத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மொரகஹகந்த மகாவலி அதிகார சபை கேட்போர் கூடத்தில், விஷேட இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரிகளான திருமதி உதேஷிகா ஜயசேகர, திரு.ஷம்மி ஸ்ரீPலால் தொட்டவத்த ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். . இந்த நிகழ்ச்சியின் மூலம், இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் அதன் விளைவுகள், இலஞ்ச ஊழல் தொடர்பிலான கேள்வி பதில்கள் மற்றும புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.