காலி மாநகர சபையின் 180 அதிகாரிகளின் பங்கேற்புடன், 2025 மார்ச் மாதம் 06 ஆம் திகதி மாநகர சபை வளாகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. காலி மாநகர சபையின் அலுவலக அடிப்படையிலான மற்றும் கள அதிகாரிகளை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இரண்டு அமர்வுகளாக நாள் முழுவதும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜயசேகர மற்றும் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி விமுக்தி ஜயசூரிய ஆகியோர் இந்த நிகழ்;ச்சித் திட்டத்தின வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், குறித்த நிகழ்வில் மாநகர ஆணையாளரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், ஊழல் தடுப்பு நிவாரண நுட்பங்கள்> இலஞ்ச ஊழலின் விளைவுகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடரபான சந்தேக நிவர்த்திகள்> நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட அறிமுகம் முதலான விடயப்பரப்புக்களில் தெளிவூட்டல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது..