தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் மேல் மாகாண திட்டத்திற்கு இணையாக, 14.03.2025 அன்று அகலவத்தை பிரதேச சபையில் பணியாற்றும் 70 அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம்.
பிரதேச சபை கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி சமோதி ஜெயசிங்க மற்றும் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திரு. ஷிலமேக வெலித்தொட்டகே ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். ஊழல் தடுப்பு உத்திகள், இலஞ்ச ஊழலின் விளைவுகள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடரபான சந்தேக நிவர்த்திகள், நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட அறிமுகம் முதலான விடயப்பரப்புக்களில் தெளிவூட்டல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.;