டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுடன் (CIABOC) இணைந்து டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்பு நிவாரண திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது. இந்த நிகழ்ச்சி, பண்டாரகமவில் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்டில் நடைபெற்றது.
டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரோஹண திசாநாயக்க உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் பங்கேற்றனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) உதவி பணிப்பாளர் நாயகம் திருமதி. திஸ்னா குருசிங்க மற்றும் ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி. நிபுனி கோஷிலா தென்னகோன் ஆகியோர் விரிவுரைகளை முன்னெடுத்தனர். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், நேர்மைத்திறன், விழுமியங்கள், ஊழல் மதிப்பீட்டு சுட்டி மற்றும் வேலைத்தளத்தில் இலஞ்சத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விடயப்பரப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.