இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து கொழும்பு தெற்கு பொலிஸ் பிராந்தியத்தில் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தொடர் தடுப்பு நிவாரண பயிற்சி நெறி;யினை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் 2025 மார்ச் 01 ஆம் திகதி சனிக்கிழமை, இந்தத் தொடரின் முதலாவது நிகழ்ச்சி கொழும்பில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சுமார் 110 அலுவலர்கள் கலந்துகொண்டு மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
இலஞ்ச ஊழல் தடுப்பு உத்தியோகத்தர்களான திருமதி உதேஷிகா ஜயசேகர மற்றும் திரு. சம்பத் ஆரச்சிகே ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். அதில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அதன் விளைவுகள், நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.