இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து கொழும்பு தெற்கு பொலிஸ் பிராந்தியத்தில் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தொடர் தடுப்பு நிவாரண பயிற்சி நெறி;யினை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் 2025 மார்ச் 15 ஆம் திகதி சனிக்கிழமை, இந்தத் தொடரின் இரண்டாவது நிகழ்ச்சி கொழும்பில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது, அங்கு சுமார் நூற்றி ஐம்பது பொலிஸ் அதிகாரிகள் கலந்து மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
இலஞ்ச ஊழல் தடுப்பு உத்தியோகத்தர் திருமதி சமோதி ஜயசிங்க, மற்றும் விசாரணை உத்த்pயோகத்தர் திரு சாந்த செனவிரத்ன ஆகியோர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான வளவாளர்களாக கலந்து விரிவுரைகளை முன்னெடுத்தனர். அதில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அதன் விளைவுகள் நேர்மைத்திறன் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.