சிறைச்சாலை திணைக்களத்தினால் பணியமர்த்தப்பட்டுள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறைகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் புதிய பயிற்சி நிலையத்தில அத்திணைக்கள உத்தியோகத்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சித் தொடரில்இ ஐந்தாவது செயற்திட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி 2024 ஜூன் 3 அன்று நடைபெற்றது.