கரடியனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி புதிய வீடு கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த பிரதிவாதி குறித்த கட்டுமானப்பணிக்கான திட்டத்திற்கு உரிய அனுமதியை பெறவில்லை என்றும் அது குற்றம் என்றும், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால், ரூ.50,000.00 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறி அதற்கு பதிலாக> முறைப்பாட்டாளருக்கு கட்டுமானப் பணிகளை தடையின்றி முனனெடுப்பதற்கு அனுமதி;ப்பதாகவும்> கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு அதே அமைப்பிலான திட்டத்தினை வரைந்து அதனை அனுமதித்து தருவதற்கு 12000/=- (பன்னிரண்டாயிரம் ரூபாயினை கோரி, அந்தத் தொகையில், ரூ. 5000/= (ஐந்தாயிரம் ரூபாயினை) ஏலவே பெற்றுக் கொண்டதுடன் மீதமுள்ள தொகையில் 6000/= (ஆறாயிரம் ரூபாயினை) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் 29.04.2025 அன்று காலை 10.49 மணியளவில்> கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசேதாகர் ஒருவர் முறைபப்hட்டாளரின் வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.