வெளிநாடு செல்வதற்குத் தேவையான வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக 15000.00 ரூபாய் இலஞ்சம் கேட்டுஇ சுற்றிவளைப்பின் போது 10000.00 ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் இரத்தினபுரிஇ பெலெல்லேகம பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதுடன்இ அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளி 2024.07.06 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா அவர்களால் அனைத்து குற்றங்களுக்கும் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்இ அது 5 வருட காலத்திற்கு பிற்போடப்பட்டது. மேலும் 20000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன்இ அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 06 மாத இலகு சிறைத்தண்டனையூம் விதிக்கப்பட்டது. மேலும்இ இலஞ்ச சட்டத்தின் 26ஆவது பிரிவின் பிரகாரம் 10000.00 அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழவை பிரதிநிதித்துவம் செய்யூம் வகையில் உதவிப்பணிப்பாளர் (சட்டம்) துசிதா ஜயநெத்தி அவர்கள் செயற்பட்டார்.