குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையில் சுகாதார சுத்திகரிப்பு பணியாளரான குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளரிடம் 2000/- ரூபாவினை கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் MC B.8455/01/2014 தாக்கல் செய்த வழக்கு தொடர்பில், மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த மதுமுருட்டுவாகே ரத்தரனாகே ரூபசிங்க என்பவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, 31.01.2025 அன்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற இல (1) இன் முன்னாள் பிரதம நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் அவர்கள் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 18 மாதங்கள் கடின உழைப்புடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு குற்றத்திற்கும்; ரூபா 5000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சார்பில் உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி அனுத்தரா ஜயசிங்க அவர்கள் குறித்த வழக்கினை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.