2019 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் CIABOC இற்கு விஜயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி சலுகைகளின் கீழ் கடமைகளை செயல்படுத்துவதையும், தேசிய செயல் திட்டம் மற்றும் சட்டம் மற்றும் ஆன்லைன் மூலமான சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் முறையின் திருத்தங்களையும், அதனை செயற்படுத்துவதற்கான CIABOC இன் ஆர்வ வெளிப்பாட்டினையும் அவதானித்தனர்.
ஆணையாளர் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளிவ். லால். ரஞ்சித் சில்வா, பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்ட்தரணி சரத் ஜயமான்ன மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சனி செனவிரத்ன, பிரதி பணிப்பாளர் நாயகம் திருமதி மயூரி உடவெல மற்றும் ஆணைக்குழுவின் நிரவாகம், நிதி, புலனாய்வு பிரிவுகளின் பணிப்பாளர்கள் ஆகியோருடன், ஐரோப்பிய யூனியனின் திரு குஸ்ஹோட்டின் (சிரேஷ்ட வர்த்த ஆலோசகர், MSG தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் (ஐரோப்பிய வெளியுறவுப் பிரிவு), கரோலின் வினோட் (தென்னாசிய பிராந்திய அலுவல்கள்) ஆகியோரும் மேற்படி கூட்டத்தொடரில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.