முன்னால் அமைச்சர் ஏ.எச்.எம். பவூசிக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

முன்னால் இடர் முகாமைத்துவ அமைச்சரான ஏ.எச்.எம்.பவூசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் 2024.08.27 அன்று தீர்ப்பளித்திருந்தது. 2010ஆம் ஆண்டில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த 19இ500இ000.00 பெறுமதியான லேன்ட் குரூசர் வகையிலான வாகனமொன்றை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியமை மற்றும் அதன் பாவனை செலவூகளுக்காக சிரே~;ட அமைச்சரவை செயலாளர் அலுவலகத்திலிருந்து 1இ073இ334.93 ரூபாயினை பெற்றுக்கொண்டமை போன்ற குற்றங்களுக்காகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன்இ குறித்த ஊழல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகவிருந்த சித்தி மரீனா மொகமட் என்பவரை தூண்டியமை மற்றும் சட்ட விரோதமாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் நோக்கில் தமது பதவியை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவூம் மேற்குறித்த தண்டனை வழங்குமாறு கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும்இ இங்கு தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் முறைப்பாட்டிற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி அசித அந்தனி அவர்களும் பிரதிவாதியை பிரதிநிதித்துவப்படுத்தி சனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னான்டோ அவர்களும் தோற்றினர்

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search