இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் (அரசாங்க வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலஞ்சமாக ரூபா 200,000.00 மற்றும் ரூபா 150,000.00 கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில்) கடந்த 2025.03.26 ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் காலை 9.15 மணியளவில்; ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (ஐ.தே.க) தொன் ஹரீந்திர சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 28.03.2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.