ஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய  சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு (CIABOC) 2019 டிசம்பர் 09 ஆம் தினத்தின் உதயம் மற்றைய நாட்களை போன்றதல்ல. அது விழுமியப்பண்புகள்; மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கொண்டதோர் கலாசாரத்தை உறுதி செய்வதில் ஆணைக்குழுவின் ஆற்றல், நம்பிக்கை மற்றும் செயல்பாடுகள் அனைத்து நிரம்பியதோர் நாள்.  CIABOC ஆல் டிசம்பர் 9, 2019 அன்று மு.ப 6.00 மணி முதல் பரந்த அளவிலான பொது மக்களுக்கான  வெளியீட்டு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் இரவு 7.00 மணி வரை இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதில் அரசினதும் மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பை நிலைநிறுத்துவதே பிரச்சாரத்தின் பிரதான இலக்காக இருந்தது. இந்த பிரச்சாரம் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டத்தின் மூலோபாயம் B இன் அடிப்படையில் அமைந்திருந்தது.  மூலோபாயம் பி- 'மதிப்பு அடிப்படையிலான கல்வி மற்றும் சமூக ஈடுபாடு' - நெறிமுறை மதிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சமூக ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதனை நோக்காக கொண்டது. CIABOC இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளில் மட்டுமல்லாமல், தடுப்பு நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களிடத்தில் ஒரு கருத்தியல் ரீதியான மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதே ஆணைக்குழுவின் ஆயிரம் மைல்களை நோக்கிய ஊழல் எதிர்ப்பு பயணத்தின் ஆரம்ப படியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த பிரச்சாரம் இரண்டு காரணங்களினால் முக்கியம் பெறுகின்றது. முதலாவதாக, இலங்கை சமீபத்தில் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதன் பின்னணியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது, அவர் தனது தேர்தல் பரப்புரையில் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றான 'எங்கள் தாய்நாட்டை இலஞ்சம் மற்றும் ஊழலை அகற்றுவதன் மூலம் நேர்மையான தேசத்தை உருவாக்கும் வாக்குறுதியுடன் தெரிவாகியுள்ள அதிமேதகு ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆசிர்வாதம்.  இரண்டாவதாக, மார்ச் 18, 2019 அன்று தேசிய செயல் திட்டம் ஆரம்பிக்ககப்பட்டதைத் தொடர்ந்து,  CIABOC பொதுமக்களை நாடிச்  செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பிரச்சாரம் ஊஐயுடீழுஊ அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் மகத்தான கடின கூட்டுமுயற்சியின் விளைவாகும். இந்த பிரச்சாரத்தினை முன்னெடுப்பதற்கான தாராள ஒத்துழைப்புக்களை வழங்குவதில் இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தன்னார்வத்துடன் மகத்தான பங்களிப்புக்களை நல்கியது.

பிரதான பிரச்சாரம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பினை அண்மித்த மற்றும் நாட்டின் பிற ரயில் நிலையங்களினையும்  அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.  சமூகத்தில் மனப்பாங்குகளை மாற்றுவதற்கான கைங்கரியத்தை உண்மையில் சமூகத்தின் மிகச்சிறிய அலகான, 'வீடு' என்பதிலிருந்தே தொடங்குதல் வேண்டும் என்பதை ஊஐயுடீழுஊ அங்கீகரித்தது. ஆகையால், ரயில்வே பொதுமக்கள் மத்தியில் மிகவும் பொதுவான போக்குவரத்து முறையாக இருப்பதால், குழந்தைகள் உட்பட பொது மக்களை மட்டுமல்ல, அரச ஊழியர்களையும் இலக்கு வைக்கக்கூடிய ஒரு இடத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். கோட்டை ரயில் நிலையம் குறிப்பாக கேந்திர புள்ளியாக தேர்வு செய்யப்பட்டது, ஏனெனில் எல்லா நாட்களிலும் சுமார் 250,000 க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்து செல்லும் நிலையமாகும். இருப்பினும், ஒரே நேரத்தில் மருதானை, தெமட்டகொட, கொம்பனித்தெரு, செயலகம், பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுபிட்டி ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பொது மக்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலாக, அடையாளம் காணப்பட்ட 4 ரயில் பாதைகளில் மொபைல் (நடமாடும்) பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அதன்படி, தன்னார்வலர் குழுக்கள் பொல்கஹவெல, பெலியத்த, குருநேகலை, மற்றும் சிலாபம் ஆகிய இடங்களுக்கு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், ஒவ்வொரு ரயிலின் முதல் பெட்டியின் முன்பக்கத்திலும் இருபுறமும் 48 ரயில்களில் ஊழல் எதிர்ப்பு நாள் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், ஊழல் எதிர்ப்புச் செய்தியை பொதுமக்களுக்குத் தெரிவிக்க, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள்; கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றையும் பிரச்சாரத்தில்  பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் திரு. மஹிந்த தேசப்பிரிய முதலான பிரபலங்கள் கலந்து கொண்டனர், அவர் தனது உரையில் இலஞ்சம் இல்லாதபோது தான் ஜனநாயகம் வலுப்பெறும் என்று கூறினார், பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் திரு. ஜகத் பெரேரா,  இலங்கையின் ICTA இன் மூத்த ஆலோசகர் திரு. இந்திகா டி சொய்சா மற்றும் பொது நிர்வாகம், உள்விவகார, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதோடு, தெளிவான அச்சிடப்பட்ட பிரசுரங்கள் அவர்களை சென்றடைவதோடு மட்டுமல்லாமல், இலஞ்சம் ஏற்படுவதைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு ஊழல் எதிர்ப்பு கருப்பொருள்கள் மீது சீட்டிழுப்புக்கன் மற்றும் போட்டிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஊழல், ஊழல் எதிர்ப்பு வாசகங்களுடனான அலங்காரம் செய்யப்பட்ட (பிராண்டிங்) ரயில் பெட்டிகள், ஊழல் எதிர்ப்பு வாசகங்களை சுமந்து செல்லும் வாகன ஸ்டிக்கர்களை ஒட்டுதல் போன்றவை. மற்றும் பொதுமக்களிடமிருந்தான அதிக கவனத்தை ஈர்த்த நடவடிக்கைகளில் ஒன்றாக, பிரபல நடிகரும் அவரது துணைவியுமான திரு மிஹிரா சிறிதிலக சோடியினர் நிகழ்த்திய நாடக பாணியிலான அரங்கேற்றங்கள் விளங்கியதுடன், மகரகம தேசிய இளைஞர் பேரவை நாள் முழுவதும் நிகழ்த்திய தெரு நாடகங்களின் தொடர்கள் மற்றும்  கருத்தாடல் நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிப்படுத்தல்கள் முதலானவை ஊழல் எதிர்ப்பு பற்றிய வெற்றிகரமாக விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்தததுடன், பார்வையாளர்கள் மத்தியில் அழியாத சுவடுகளை ஏற்படுத்தியது எனலாம்.

இந்த பிரச்சாரத்தில் 216 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட சுமார் 500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பிரச்சாரத்தின் முடிவில் CIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் மூலம் இந்த தன்னார்வலர்களின் சேவை பாராட்டப்பட்டது. ஊழல் எதிர்ப்பு பற்றிய செய்தியுடன் மட்டுமல்லாமல், திருடர்கள் ஏன் பிடிபடவில்லை என்பதை பொதுமக்களுக்கு அறிவூட்டுவதோடு மட்டுமல்லாமல், தூய்மையான மற்றும் பசுமையான சூழலின் செய்தியை பரப்புவதன் மூலமும் இந்த பிரச்சாரம் வெற்றிகரமாக முடிந்தது. இவ்வாறு, எங்களுடன் இணைந்த அனைவருமே தூய்மையான கரங்கள் மற்றும் நேர்மையான இதயங்களுடன் வீட்டிற்குச் செல்வதை உறுதிசெய்து நிகழ்ச்சிகள் யாவும் நிறைவடைந்ததுடன் தூய்மையான குப்பைகளற்ற புகையிரத நிலையத்தை கையளித்துச் செல்வாதற்கான அன்பான அழைப்பும் விடுக்கப்பட்டது. 

'உலகம் உங்கள் கருத்தால் அல்ல, உங்கள் முன்மாதியினால் மாற்றப்படுகிறது'

–Paulo Coelho-

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search