முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றி வந்தபோது, தனது மனைவியிடமிருந்து லொத்தர் சபையின் பாவணைக்கு வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்களில் தலா ஒவ்வொரு வாகனத்திற்கும் உண்மையான வரி ரூபா 635000.00 ஆக இருந்த நிலையில், ரூபா 960,000.00 வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களினால் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதன் அடிப்படையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
திரு. சரண குணவர்தன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாக்கி குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும், ஒவ்வொரு வாகனத்திற்கும் 100000.00 வீதம் ரூபா 300000.00 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. அபராதத்தினை செலுத்தத் தவறினால், தலா 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
மேற்படி வழக்கினை ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் திரு. அசித அந்தனி அவர்கள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.