கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த மூன்று பொலிஸ் அலுவலர்கள் முறைப்பாட்டாளரிடம் ரூ. 20000.00 இலஞ்சமாக கோரி அதில் ரூபா 10000.00 இனை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ சம்பத் விஜேரத்ன அவர்கள் மூவரையும் குற்றவாளிகளாக்கி தீரப்பளித்தார்.
சட்ட விரோதமாக மதுபானம் விநியோகித்து வந்த முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவரிடமிருந்து இருந்து ரூ. 20000.00 இலஞ்சமாக கோரிப் அதில் ரூபா 10000.00 இனை பெற்றுக் கொண்ட பெற்றுக் கொண்டமை தொடர்பிலான சுற்றிவளைப்பின் அடிப்படையில் ஆணைக்குழவினால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேற்படி வழக்கினை ஆணைக்குழுவின் சட்ட அலுவலர் செல்வி தனூஜா பண்டார அவர்கள் முன்னெடுத்ததுடன், இத்தகைய குற்றவாளிகள் தமது செயற்பாடுகளினூடாக தமது பிள்ளைகளையே பிழையாக வழிநடாத்த முற்படுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகினால் ஒட்ட மொத்த சமூகத்தினதும்நம்பிக்கை சீர்குழைந்துள்ளது. எனவே இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுதல் வேண்டும் என நீதிமன்றை கேட்டுக் கொண்டார்.