இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி பிராந்திய அலுவலகத்தின இரு டிக்கட பரிசோதகர்கள் மற்றும் எழுதுநர் ஒருவரும் ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.

NB 8869 இலக்கத்தையுடைய பஸ்ஸின் முறைப்பாட்டாளரான பஸ் நடத்துநர் உலப்பனை பகுதியில் கடமையில் இருந்த போது ; டிக்கெட்டுகளை சரிபார்க்கும் பணியினை மேற்கொண்ட சந்தேக நபர்கள் அன்று மேற்படி பேருந்தில் நுழைந்துள்ளனர். இந்த சோதனையின் போது நடத்துனரால் பஸ் டிக்கெட் வழங்கப்படாத சில பயணிகளை பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எனவே, சந்தேகநபர்களான பரிசோதகர்கள் மூன்று பேரும் இந்த நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக ரூபா 20000.00 இலஞ்சமாகக் கோரியதோடு, அந்த இடத்திலேயே ரூபா 12000.00 இனை இலஞ்சமாக பெற்றுள்ளனர். பின்னர், 06.11.2019 அன்று மூன்று சந்தேக நபர்களும் எஞ்சிய தொகையhன ரூபா 8000.00 இனைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search