இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸ்ஸை பிராந்தி மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அலுவலர் ஒருவர் முறைப்பாட்டாளர் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி மணல் கொண்டு சென்றார் எனக்கூறி அவரின் மணல் அனுமதிப்பத்திரம், வருமான வரிப்பத்திரம், காப்புறுதி பத்திரம் மற்றும் லங்காபுர பொலிஸ் நிலையத்தினால் முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் அனைத்தையும், பொலிஸ் அலுவலர் கையகப்படுத்திய நிலையில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதற்கு ரூபா 2000.00 இனை முறைப்பாட்டளரிடமிருந்து இலஞ்சமாகப் கோரிப் பெற்றுக் கொண்ட நிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.